×

மக்களை கதறவிடும் டீசல் விலையும் சதமடித்தது… தாறுமாறாக உயரப்போகும் விலைவாசி!

கொரோனாவுக்கு அடுத்தப்படியாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பெட்ரோ, டீசல் விலை உயர்வு உருவெடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டும் ஏன் இந்தளவிற்கு விலை ஏறிக்கொண்டிருக்கிறது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கூட இவ்வாறு விலையேறிக் கொண்டிருப்பது மத்திய அரசின் மீது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. விலையேற்றத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. இதற்கு விளக்கம் கொடுக்கும் மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் செய்வதாகவும், டிமாண்ட் செய்வதாகவும் கூறுகிறது. ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரி
 

கொரோனாவுக்கு அடுத்தப்படியாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பெட்ரோ, டீசல் விலை உயர்வு உருவெடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டும் ஏன் இந்தளவிற்கு விலை ஏறிக்கொண்டிருக்கிறது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கூட இவ்வாறு விலையேறிக் கொண்டிருப்பது மத்திய அரசின் மீது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. விலையேற்றத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.

இதற்கு விளக்கம் கொடுக்கும் மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் செய்வதாகவும், டிமாண்ட் செய்வதாகவும் கூறுகிறது. ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரி குறித்து மட்டும் வாய் திறப்பதில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதற்குத் தானே அரசு என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு ஒருபுறமென்றால் மாநில அரசு தன் பங்கிற்கு வரி விதிக்கிறது. இதனால் பெட்ரோல் விலை சதத்தைத் தாண்டிச் செல்கிறது.

இதுவரையில் பெட்ரோல் விலை ஒருபுறம் கூடினாலும் டீசல் விலை 100ஐ தொடாமல் இருந்தது ஓரளவிற்கு ஆறுதல் அளித்தது. ஆனால் தற்போது டீசல் விலையும் சதமடித்திருப்பது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள சில மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி சென்றுள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ்தானிலுள்ள கங்கா நகரில் 102 ரூபாய் 57 காசுகளுக்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 90-95 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் இருக்கிறது. டீசல் தான் அனைத்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் ஆதார எரிபொருள். இதனால் விலைவாசி தாறுமாறாக உயரப்போவது மட்டும் திண்ணம்.