×

“முதல் மேட்சில் போனியாகாத தோனி” -இன்று 786 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி -வாழ வைத்த கிரிக்கெட்டுக்கு ஜே!

இந்திய கிரிக்கெட்டின் கூல் கேப்டன் தோனி நேற்று அறிவித்த தன்னுடைய ஒய்வு பெறும் தகவலை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நேரத்தில் அவர் கிரிக்கெட் மூலம் சேர்த்த சொத்து விவரங்களை பார்ப்போம் . எம்.எஸ். தோனி 23 டிசம்பர் 2004 அன்று சிட்டகாங்கில் உள்ள மா அஜீஸ் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவர் 7-வது இடத்தில் பேட் செய்ய இறங்கிய அவர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்! .மேலும் அவர்
 

இந்திய கிரிக்கெட்டின் கூல் கேப்டன் தோனி நேற்று அறிவித்த தன்னுடைய ஒய்வு பெறும் தகவலை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நேரத்தில் அவர் கிரிக்கெட் மூலம் சேர்த்த சொத்து விவரங்களை பார்ப்போம் .


எம்.எஸ். தோனி 23 டிசம்பர் 2004 அன்று சிட்டகாங்கில் உள்ள மா அஜீஸ் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவர் 7-வது இடத்தில் பேட் செய்ய இறங்கிய அவர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்! .மேலும் அவர் அப்போது விக்கெட்கீப்பராக கையுறைகளுடன் நின்றபோது எந்த கேட்சையும் பிடிக்கவில்லை,.ஆனால் பதட்டமான அந்த போட்டியில் இந்தியர்கள் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர். இதனால் முதல் மேட்ச்சில் தோனி போனியாகவில்லை .

ஆனால் மனம் தளராமல் முன்னேறிய தோனியின் சொத்து மதிப்பு இன்று சுமார் 786.53 கோடி ரூபாய்.இதன் மூலம் அவர் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் .


அவர் ஐபிஎல் அணியின் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன்ஷிப்பில் 2018 ஆம் ஆண்டில் ₹ 15.71 கோடிக்கு கையெழுத்திட்டார். தோனி தனது ஐபிஎல் பயணத்தில் 13 ஆண்டுகளில் மொத்தம்137.8 கோடி ரூபாய் சம்பளத்தை ஈட்டியுள்ளார்.அவர் 2015ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 23 வது இடத்தைப் பிடித்தார்.அவர் ஓய்வு பெற்ற பின்னர் அவரின் ஓய்வூதியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.மேலும் அவர் ஜார்க்கண்டில் ஹோட்டல் மஹி ரெசிடென்சி என்ற பெயரில் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ்ஃபிட் என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 190 ஜிம்களை அவர் வைத்திருக்கிறார். விளையாட்டு ஆடைகளை விற்கும் செவன் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார் ,இதனால் கிரிக்கெட்டிலிருந்து அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராகத்தான் ஒய்வு பெறுகிறார்.