பிரதமர் கூட்டம் - துப்பாக்கியோடு வந்தவர் கைது
மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி போலி அடையாள அட்டையுடன் வந்த ரோஹன் பரேக் (24), அவருடன் வந்தவரையும் கைது செய்தது மும்பை காவல்துறை. 24 வயதான ரோகன் பரேக், தன்னை பிரதமர் அலுவலக (PMO) அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டார், ஆனால் சோதனையில் அவர் போலி PMO அடையாள அட்டையை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி அடையாள அட்டையை உருவாக்கியது யார்? துப்பாக்கியுடன் வந்தவரின் நோக்கம் என்ன என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரதமரின் வருகைக்கு முன்னதாகவே இந்த இரு நபர்களை போலீசார் கைது செய்தனர். பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மும்பை குற்றப்பிரிவு விசாரணையை மேற்கொண்டுவருகிறது.