×

தலைநகரை வச்சி செய்யும் கொரோனா... 55 மணி நேரம் முழு ஊரடங்கு - அலறும் மக்கள்!

 

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தான் இந்தியாவை சின்னாபின்னமாக்கியது. குறிப்பாக தலைநகர் டெல்லி படாத பாடுபட்டது. டெல்லியின் நிலையைக் கண்டு வருத்தப்படுவதா தங்கள் மாநிலத்தில் நடப்பதைக் கண்டு வருத்தப்படுவதா என தெரியாமல் பெரும்பாலான மாநில அரசுகள் புலம்பின. அந்தளவிற்கு டெல்லியை உலுக்கி எடுத்தது டெல்டா கொரோனா. தற்போது வந்திருப்பதோ ஒமைக்ரான். இந்த கொரோனா டெல்டாவை விட அதிவேகமாகப் பரவக்கூடியது.நினைத்ததை விட வேகமாகப் பரவி மூன்றாம் அலையையும் உருவாக்கிவிட்டது. 

தலைநகரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதற்கு முன்பாகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் (வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை) முழு ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்தது. அதன்படி டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். அத்தியாவசியமற்ற எந்த செயல்பாடும் அனுமதிக்கப்பட மாட்டாது.  

பால், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று (ஜனவரி 14) இரவு 10 மணியிலிருந்து இரவு நேர ஊரடங்கு தொடங்கியது. இந்த ஊரடங்கு திங்கட்கிழமை (ஜனவரி 17) அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். கிட்டதட்ட 55 மணி நேரங்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.