×

25 ஆயிரத்திலிருந்து ஆயிரத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு – ஊரடங்கால் அசத்தும் டெல்லி!

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவில் தான் கோரதாண்டவம் ஆடியது. குறிப்பாக ஏப்ரல் மாதம் ஆரம்பித்ததிலிருந்தே தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசு திண்டாடியது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் வழங்காததால் பல ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தனர். பிணங்களை அடக்கம் செய்ய முடியாத விரக்தியில் குடும்ப உறுப்பினர்ளின் அவலக் குரல் காதைக் கிழித்தது. டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி
 

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவில் தான் கோரதாண்டவம் ஆடியது. குறிப்பாக ஏப்ரல் மாதம் ஆரம்பித்ததிலிருந்தே தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசு திண்டாடியது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் வழங்காததால் பல ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தனர்.

பிணங்களை அடக்கம் செய்ய முடியாத விரக்தியில் குடும்ப உறுப்பினர்ளின் அவலக் குரல் காதைக் கிழித்தது. டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசையும் மத்திய அரசையும் மிகக் கடுமையாக திட்டி தீர்த்தது. பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்தியது. தலைநகரின் அவலநிலையை மாற்ற பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டின. அதேபோல டெல்லியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகியது. நாட்டிலேயே முதல் மாநிலமாக முழு ஊரடங்கை மீண்டும் பிறப்பித்திருந்தது.

அதன் பலனாக படிபடியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. நேற்று மூன்றாயிரம் வரை பதிவான கொரோனா பாதிப்பு, இன்றோ 1,600 என்ற எண்ணிக்கையிலேயே பதிவாகியிருக்கிறது. பாசிட்டிவிட்டி விகிதம் 2.5 சதவீதத்துக்கும் கீழே சென்றுள்ளது. ஊரடங்கால் கிடைத்த பலனை தாங்கள் மீண்டும் கொரோனாவிடம் திருப்பிக் கொடுக்க தயாரில்லை என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அதனால் இன்னும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மே 31ஆம் தேதிக்குப் பின்பும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றால் தளர்வுகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.