×

“அக்கௌன்ட் நம்பரை கேட்டு ,உங்க பணத்துக்கு வைப்பாங்க வேட்டு” -பிரபல வங்கிகள் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி..

பிரபலமான பல வங்கிகளின் பெயரில் போலியாக கால்சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஒரு கூட்டத்தை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் . டெல்லியில் அனில் சிங் என்பவர் பிரபல வங்கியின் பெயரில் போலியான கால் சென்டர் நடத்தி, அதன் போன் நம்பரை சமூக ஊடகத்தில் வெளியிடுவார் .அப்போது பலர் அந்த போன் நம்பரை பிரபல வங்கியின் போன் நம்பர் என நினைத்து அதற்கு போன் செய்து தங்களின் அக்கௌன்ட் நம்பர் ,ஒடிபி நம்பர்
 

பிரபலமான பல வங்கிகளின் பெயரில் போலியாக கால்சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஒரு கூட்டத்தை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் .
டெல்லியில் அனில் சிங் என்பவர் பிரபல வங்கியின் பெயரில் போலியான கால் சென்டர் நடத்தி, அதன் போன் நம்பரை சமூக ஊடகத்தில் வெளியிடுவார் .அப்போது பலர் அந்த போன் நம்பரை பிரபல வங்கியின் போன் நம்பர் என நினைத்து அதற்கு போன் செய்து தங்களின் அக்கௌன்ட் நம்பர் ,ஒடிபி நம்பர் விவரங்களை தெரிவிப்பார்கள் .அதை வைத்து அணில்சிங் கூட்டாளிகள் பொதுமக்களின் அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை ஆட்டைய போடுவது வழக்கம் .

அவர் போலி கால் சென்டருக்கு உடந்தையாக கவுதம், அமித், வினய், ராகுல், சங்கீதா, ரஜினி, இஷிகா உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர் .இந்நிலையில் கடந்த வியாக்கிழமையன்று டெல்லியை சேர்ந்த
ராஜத் டாண்டன் என்பவர் ஆன்லைனில் பிரபல வங்கியின் போன் நம்பரை தேடிய போது இந்த டுபாக்கூர் கும்பலின் போன் நம்பர் வந்துள்ளது .உடனே அவர் அந்த நம்பருக்கு போன் செய்து தன்னுடைய பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டார்.

அதற்கு அவர்கள், அவரின் அக்கௌன்ட் நம்பர் மற்றும் விவரங்களை கேட்டதும் ,அவரும் கொடுத்துள்ளார் .உடனே அடுத்த நிமிடம் இவரின் கணக்கிலிருந்து 64680ரூபாய் திருடப்பட்டது .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது லைன் கிடைக்கவில்லை.

உடனே வங்கிக்கு நேரடியா சென்று விசாரித்த போது தான் போலியான கால் சென்டர் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் ,உடனே அவர் அருகிலுள்ள போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி போலியாக கால் சென்டர் நடத்திய அனில் சிங் என்பவரையும் ,கால் சென்டருக்கு உடந்தையாக இருந்த கவுதம், அமித், வினய், ராகுல், சங்கீதா, ரஜினி, இஷிகா உள்ளிட்ட பலரையும் கைது செய்தனர் .இவர்கள் பல மாதங்களாக போலியாக கால் சென்டர் நடத்தி 650 க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது .