×

டெல்லிக்கு இனி ஊரடங்கு தேவையில்லை! – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் இரண்டாவது முழு ஊரடங்கு தேவைப்படாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று அவர் அளித்த பேட்டியில், “டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மாடல் தடுப்பு நடவடிக்கை இன்று இந்தியா முழுக்க பேசப்படுகிறது. நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் டெல்லியில் 88 சதவிகிதமாக உள்ளது. ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2-3 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா
 

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் இரண்டாவது முழு ஊரடங்கு தேவைப்படாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில், “டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மாடல் தடுப்பு நடவடிக்கை இன்று இந்தியா முழுக்க பேசப்படுகிறது. நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம்

டெல்லியில் 88 சதவிகிதமாக உள்ளது. ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2-3 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
நிலைமை திருப்திகரமாக இருப்பதால், டெல்லிக்கு இரண்டாவது கட்டமாக ஊரடங்கு தேவைப்படாது. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 15,500 படுக்கைகள் உள்ளன. தற்போது 2800 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று

 

வருகின்றனர். மீதம் 12,500 படுக்கைகள் காலியாகத்தான் உள்ளது. அதிக கொரோனா நோயாளிகள் கண்டறிவதில் கடந்த ஜூன் மாதத்தில் டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக புதிய நோயாளிகள் கண்டறியும் பட்டியலில் டெல்லி 10வது இடத்தில் உள்ளது” என்றார்.