×

வேளாண் சட்டங்களை ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்- மத்திய அரசு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை
 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தயார் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்றும், வேறு எந்த சலுகைகளையும் பெற நாங்கள் தயாராக இல்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என்றும், ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் எனவும் மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.