×

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்ட ஜோடிகள் -பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட உறவினர்கள்

குடும்பத்தினரிடம் சொல்லாமல் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டதால்,பெண்ணின் உறவினர்கள் பொது இடத்தில துப்பாக்கியால் சுட்டு கொண்ட சம்பவம் நடந்துள்ளது . செப்டம்பர் 3 ம் தேதி, டெல்லியின் ஜோகாபாய் பகுதியில் கடை நடத்தும் இர்பான் என்பவரின் கடையில், அடில் என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார் .இந்த துப்பாக்கி சூடு பற்றி கேள்விப்பட்ட போலீசார் அடிலை கைது செய்தனர் .அப்போது அடில் தான் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணத்தினை கூறினார் . அவரின் கூற்றுப்படி இர்பானின்
 

குடும்பத்தினரிடம் சொல்லாமல் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டதால்,பெண்ணின் உறவினர்கள் பொது இடத்தில துப்பாக்கியால் சுட்டு கொண்ட சம்பவம் நடந்துள்ளது .

செப்டம்பர் 3 ம் தேதி, டெல்லியின் ஜோகாபாய் பகுதியில் கடை நடத்தும் இர்பான் என்பவரின் கடையில், அடில் என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார் .இந்த துப்பாக்கி சூடு பற்றி கேள்விப்பட்ட போலீசார் அடிலை கைது செய்தனர் .அப்போது அடில் தான் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணத்தினை கூறினார் .

அவரின் கூற்றுப்படி இர்பானின் மகன் மொஹமட் சாகீர் என்பவர் அடிலின் உறவினர் அனாமை யாருடைய அனுமதியும் பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். எனவே, அவர் இர்பானுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் “ஒரு பாடம் கற்பிக்க” இப்படி அவரின் கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதாக கூறினார் .இந்த துப்பாக்கி சூடு பற்றி போலீசார் கூறுகையில் அந்த துப்பாக்கி லைசென்ஸ் அவரின் தந்தையில் பெயரில் இருப்பதாகவும் ,இப்படி குடும்ப சண்டைக்கெல்லாம் பலர் பொது இடத்தில துப்பாக்கியால் சுட்டு கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி டெல்லியில் நடப்பதாகவும் ,இதனால் துப்பாக்கி லைசென்ஸ் விஷயத்தில் இன்னும் சட்டம் கடுமையாக்கப்படுமென்றும் கூறினார்கள் .பிறகு அவர்களின் குடும் ப சண்டையால பொது இடத்தில துப்பாக்கி சூடு நடத்தி அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அடில் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள் .