×

அகிலேஷ் யாதவை இன்று சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

 

மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச இருக்கிறார்.

யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் பணியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிராக பல்வேறு மாநில தலைவர்களை சந்திக்க கெஜ்ரிவால் முடிவு செய்துஇதுவரை மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், சந்திரசேகர் ராவ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.  

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச இருக்கிறார்.  உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவை இன்று சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். இதற்காக உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில், கெஜ்ரிவால் மற்றும் அகிலேஷ் யாதவின் சந்திப்பு நடைபெறும் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.