×

விசாரணை என்ற பெயரில் என்னை கைது செய்ய முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 

விசாரணை என்ற பெயரில் என்னை கைது செய்ய முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுவிசாரணை என்ற பெயரில் என்னை கைது செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியது.  இருப்பினும் அவர் ஆஜராகவில்லை.  நேற்று மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என்றும் டெல்லி மாநில அமைச்சர் ஆதிஷி நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   

இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் என்னை கைது செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ பதிவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: புதிய மதுபான கொள்கையில் ஊழல் இல்லை என்பதுதான் உண்மை. பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறது. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை. அவர்கள் அதைக் குறைக்க விரும்புகிறார்கள். எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது. பாஜகவின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது அல்ல, மக்களவைத் தேர்தலுக்கு என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என கூறியுள்ளார்.