×

ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. 

 

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், இன்று ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார்.  

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக  உச்சநீதிமன்றம்  அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆளுநர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.  ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன்பாகவே , அந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. 

அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு டெல்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  டெல்லி அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ட்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். 

ஏற்கனவே பீஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார். இதந்தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.