கையில் வைத்து பட்டாசு வெடித்த சிறுவன் பரிதாப மரணம்
Nov 9, 2026, 15:09 IST
டெல்லியில் வீட்டின் முன் கையில் வைத்து பட்டாசு வெடித்த 10 வயது சிறுவன் ரிஷி சம்பவ இடத்திலேயே பரிதாப பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நரேலாவில் பட்டாசு வெடித்து 10 வயது மகன் உயிரிழந்ததை அடுத்து, ஒரு குடும்பத்திற்கு தீபாவளி கொண்டாட்டம் துக்கமாக மாறியுள்ளது. தனது குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த ரிஷி என்ற சிறுவன், தனது கையில் வானவெடியைப் பற்றவைத்துள்ளார். அது வானில் சீறிப் பாய்வதற்குப் பதிலாக, கையில் பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுவனின் மார்பில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவனை மீட்ட பெற்றோர், நரேலாவில் உள்ள சத்யாவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ரிஷி உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.