×

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவத்துவமனையில் கடந்த 10ம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அன்று அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதியானது. அறுவைசிகிச்சை முடிந்து நிலையில் அவர் உடல்நிலை கவலைக்கிடமானது.
 

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.


மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவத்துவமனையில் கடந்த 10ம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அன்று அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதியானது.


அறுவைசிகிச்சை முடிந்து நிலையில் அவர் உடல்நிலை கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் உதவியோடு அவர் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது. அவரது உள் உறுப்புக்கள் இயல்பாக செயல்பட்டு வந்தாலும் கோமா நிலையில் இருந்து அவர் மீளவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் கொடுத்திருந்த 92 மணி நேர அவகாசம் முடிந்துவிட்டதால் இனி பயமில்லை என்று பிரணாப் முகர்ஜியின் மகன் பேட்டி அளித்திருந்தார்.


இன்றும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர் வென்டிலேட்டரில் உள்ளார். உடல் உறுப்புக்கள் இயல்பாக உள்ளன. அவரை மருத்துவ வல்லுநர் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.