×

வெள்ளிக்கிழமையால் தள்ளி வைக்கப்பட்ட பயணம் -கோழிக்கோடு விமான விபத்தில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய வெள்ளிக்கிழமை .

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் உடற் தகுதி சான்றிதழ் கிடைக்காததால் அதில் பயணம் செய்ய முடியாத ஒரு தம்பதியின் உயிர் காப்பாற்றப்பட்டது . துபாயை சேர்ந்த உமர் மற்றும் அவரின் ஏழு மாத கர்ப்பிணி ஜஸ்லீனா ஆகியோருக்கு அவர்களின் உடற் தகுதி சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ய முடியாததால் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது . கேரளாவில் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ய உமர் என்பவரும்
 

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் உடற் தகுதி சான்றிதழ் கிடைக்காததால் அதில் பயணம் செய்ய முடியாத ஒரு தம்பதியின் உயிர் காப்பாற்றப்பட்டது .


துபாயை சேர்ந்த உமர் மற்றும் அவரின் ஏழு மாத கர்ப்பிணி ஜஸ்லீனா ஆகியோருக்கு அவர்களின் உடற் தகுதி சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ய முடியாததால் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது .
கேரளாவில் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ய உமர் என்பவரும் அவரின் ஏழு மாத கர்ப்பிணி மனைவி ஜஸ்லீனா என்பவரும் முன்பதிவு செய்திருந்தார்கள் .ஆனால் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்களால் பயணம் செய்ய உடற் தகுதி சான்றிதழ் வாங்க முடியவில்லை .ஏனென்றால் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமையன்று அனைத்து அலுவலகங்களும் விடுமுறை .இதனால் அன்று கடைசி நேரத்தில் அவர்களின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது .
பிறகு அவர்கள் பயணம் செய்யாமலே அந்த விமானம் கிளம்பி கேரளா போய் விபத்துக்குள்ளாகி, பலர் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த அவர்களின் உறவினர்கள் உமருக்கு போன் செய்தார்கள் .அப்போதுதான் அவர்கள் போக இருந்த அந்த விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் .பிறகு அவர்கள் தங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி கூறினார்கள் .