×

நகைக்கடை விளம்பரத்தை நீக்க வைத்த மதவாதம் !

ஒரு அழகான விளம்பரதை வெளியிட்டுள்ளது பிரபல நகைக் கடை நிறுவனமான தனிஷ்க். ஆனால், அந்த விளம்பரம் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம்தான் தற்போது , சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டுள்ள இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரத்தினை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது. இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில்
 

ஒரு அழகான விளம்பரதை வெளியிட்டுள்ளது பிரபல நகைக் கடை நிறுவனமான தனிஷ்க். ஆனால், அந்த விளம்பரம் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம்தான் தற்போது , சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்து மதத்தை சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டுள்ள இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரத்தினை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது.

இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக சில இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து டிவிட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது. தனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்கிற பிரசாரத்தின் மூலம் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்தன. இது போன்ற எதிர்ப்புகள் காரணமாக , அந்த விளம்பரத்தை யுடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள தனிஷ்க் கடையில் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடை மேலாளரை தாக்கி, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு அந்த கும்பல் கூறியுள்ளது. அதையடுத்து மதச்சார்பற்ற விளம்பரத்தை ஒளிபரப்பியதன், மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக கட்ச் மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என அந்த கடையின் மேலாளர் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக க கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் வர்த்தகம் முடங்கி இருந்த நிலையில், தற்போதுதான் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதற்குள் ஒரு விளம்பரத்தை வைத்து, விவகாரம் ஆக்குவது நியாயமா என தொழில்துறையினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.