×

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தரப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெசட்டட் அந்தஸ்து இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசின் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.3737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தரப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெசட்டட் அந்தஸ்து இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசின் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.3737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என்றும் இதன் மூலமாக 30.67 லட்சம் ஊழியர்கள் பயனடைவதோடு பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்றும் தெரிவித்தார்.