×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… ஓரிரு நாட்களில் முடிவு!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்த மத்திய அரசு, அதன் நிலைப்பாட்டை தெரிவிக்காமலேயே இருந்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே, பொதுத்தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் தரப்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த
 

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்த மத்திய அரசு, அதன் நிலைப்பாட்டை தெரிவிக்காமலேயே இருந்தது.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே, பொதுத்தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் தரப்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மாணவர்களின் நலன் கருதி கொள்கை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் அறிவுறுத்தினர்.