×

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி திடீர் மரணம்!

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவ.26ம் தேதியில் இருந்து போராடி வருகின்றனர். 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளிரால் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக பதைபதைக்கும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி கல்தான்
 

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவ.26ம் தேதியில் இருந்து போராடி வருகின்றனர். 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளிரால் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக பதைபதைக்கும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி கல்தான் சிங்(57) காசிபூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ளார். இவர், பாரதீக கிசான் யூனியன் தலைவரின் நெருங்கிய உதவியாளராம். கல்தான் சிங் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் நேற்று மார்பு வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர், கல்தான் சிங்கின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று 1.1 டிகிரி செல்ஸியஸுக்கு வெப்ப நிலை சரிந்து கடுமையான குளிர் வாட்டி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.