×

டெல்லியில் காற்று மாசு : மெட்ரோ ரயில், பேருந்து நின்று கொண்டு பயணிக்க அனுமதி!! 

 

டெல்லியில் மிக மோசமான காற்று மாசு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் மிக மோசமாக காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் அனைத்து வாகனங்களும் நுழைவதற்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. அத்துடன் டெல்லியில் பொது போக்குவரத்தை அதிகரிக்க ஆயிரம் தனியார் சிஎன்ஜி பேருந்து களை வாடகைக்கு எடுக்கும் பணியை தொடங்கியது.

கொரோனா காரணமாக நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில்  என்ற முடிவை மறுபரிசீலனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களின் பட்டியல் போக்குவரத்து துறை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு,  அந்த வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாற்று சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் பலப்படுத்தப்படும் ஆகிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசினை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை உபயோகிப்பதை குறைத்துக் கொண்டாலும்,  அவர்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்தி பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.