×

திருப்பதியில் அனைத்து வயதினரும் சாமி தரிசனம் செய்யலாம்!

திருப்பதியில் அனைத்து வயதினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது . அதனால் திருப்பதி தரிசனமும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வருடாந்திர பிரமோற்சவம், நவராத்திரி விழாக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின்றி நடந்து முடிந்தது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 25 ஆம் தேதி முதல்
 

திருப்பதியில் அனைத்து வயதினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது . அதனால் திருப்பதி தரிசனமும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வருடாந்திர பிரமோற்சவம், நவராத்திரி விழாக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின்றி நடந்து முடிந்தது.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக திருப்பதியில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் தங்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு கோயிலுக்கும் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.