×

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்றும் 3000ஐ தாண்டியது!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,47,22,605 லிருந்து 4,47,26,246 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,389 லிருந்து 20,219 ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1,800 பேர் குணமடைந்த நிலையில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,892 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக பதிவாகியுள்ளது.