×

பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக சொகுசு காரை துல்கர் சல்மானிடம் தர சுங்கத்துறை முடிவு

 

முறையாக வரி செலுத்தாமல் உயர்ரக சொகுசு காரை இறக்குமதி செய்த புகாரில் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்ட துல்கர் சல்மானின் காரை நிபந்தனைகளுடன் திருப்பி தர சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அந்த கார்களை விற்பனை செய்தது தொடர்பாகவும் அந்தக் கார்களை வாங்கி பயன்படுத்துபவர்களின் வீடுகள் என கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கேரளாவின் முன்னணி நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் வீடுகளிலும் கடந்த மாதம் சோதனை நடைபெற்றது. இவர்கள் இருவரும் வைத்துள்ள கார்களுக்கு முறையான வருமான வரி செலுத்தாமல் இருந்தால் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர். சுங்கத்துறையை சோதனையை தொடர்ந்து துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இடைத்தரகர்கள் வெளிநாட்டு கார்களை முதலில் நமது அண்டை நாடான பூட்டானுக்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்தக் கார்களுக்கு பூட்டான் நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்படும். அதன் பின்னர் அந்த கார்கள் பயன்படுத்தப்பட்ட கார்கள் என்று வகைப்படுத்தி வரிச்சலுகை பெற்று அங்கு இருந்து இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேஷ்ம் இமாச்சல பிரதேஷ், அருணாச்சல பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு வரப்படும். பயன்படுத்தப்பட்ட கார்களை இந்தியாவுக்கு கொண்டு வரும்போது வரிச்சலுகை பெற்று அந்த கார்களை இந்தியாவில் ரீ ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை நடைபெற்று வருகிறது.