×

‘இன்று மாலை 6 மணியில்’ இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர பல மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஹரியானா மாநிலத்திலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், அந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே திருமணம், இறுதி சடங்கு, கடைகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பகல் நேரத்தில் இந்த கட்டுப்பாடுகள்
 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர பல மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஹரியானா மாநிலத்திலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், அந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே திருமணம், இறுதி சடங்கு, கடைகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பகல் நேரத்தில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஹரியானாவில் பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு நேரத்தை மாற்றியமைத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாலை 6 மணியில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் கடைகள் அனைத்தையும் 6 மணியோடு மூடிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, ஊரடங்கு நேரத்தின் போது கடைகள் செயல்படுவதால் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதன் காரணமாகவே ஊருடங்கு நேரத்தை நீட்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய குருகிராம் துணை ஆணையர், மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரவில்லை என கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.