×

4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வான சி.டி.ரவி இந்த முறை படுதோல்வி

 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜக தேசிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி படுதோல்வி அடைந்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்து வந்த பாஜக படுதோல்வி அடைந்ததுள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரம்பு மீறிய அவதூறுப் பரப்புரை செய்தனர். ஊழலை ஒழிக்க உறுதி ஏற்றவர்கள் 40 சதவீதம் கமிஷன் ஆட்சி என்ற அவப்பெயரில் மூழ்கி போனார்கள். முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்பதில் தொடங்கி, முஸ்லிம்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு ரத்து வரை சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கினர். இதுவே பாஜகவின் தோல்விக்கு காரணம் என தெரிகிறது. 

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்  சிக்மக்ளூர் தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜக தேசிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி போட்டியிட்டார். அவருக்கு 79 ஆயிரத்து 128 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையா 85 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுமார், காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார்.

அதே தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.டி.ரவி 5 வது முறையாக போட்டியிட்டு, தோல்வியை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.