கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சரணிக்கு ரூ.2.5 கோடி, வீடு கட்ட 9000 சதுர அடி நிலம், குரூப் 1 வேலை- சந்திரபாபு நாயுடு
மகளிர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சரணிக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு, வீடு கட்டுவதற்கு 9000 சதுர அடி நிலம், குரூப் 1 வேலையை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உறுப்பினரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவருமான ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணி முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் லோகேஷை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பெண்கள் உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியை ஸ்ரீ சரணி, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் லோகேஷுடன் பகிர்ந்து கொண்டார். தனக்கு ஆதரவளித்ததற்காக நன்றி தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் லோகேஷ் ஸ்ரீ சரணியை வாழ்த்தினர். மகளிர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம், இந்திய பெண்களின் சக்தியைக் காட்டியுள்ளதாகவும், மேலும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் கூறினார். எதிர்காலத்தில் இந்திய அணி மேலும் வெற்றிபெற வாழ்த்தினார்.
அப்போது மகிளா கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட டி-சர்ட்டை ஸ்ரீ சரணி முதலமைச்சருக்கு வழங்கினார். அதை அன்புடன் பெற்றுக்கொண்ட முதல்வர், ஸ்ரீ சரணியின் அணி எதிர்காலத்தில் மேலும் வெற்றிபெற வாழ்த்தினார். ஸ்ரீ சரணிக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு, , வீடு கட்ட கடப்பாவில் 1000 சதுரஅடி நிலம் ஒதுக்கப்படுவதாகவும் , மாநில அரசில் குரூப் 1 அதிகாரியாக வேலை வழங்குவதாகவும் முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார். ஸ்ரீ சரணியுடன், மகளா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும் உடனிருந்தார். முன்னதாக, கன்னவரம் விமான நிலையத்தில் ஸ்ரீ சாரணிக்கு வரவேற்பு அளித்த அமைச்சர்கள் அனிதா, சவிதா, சந்தியாராணி, ஆந்திர கிரிக்கெட் சங்கத் தலைவர் கேசிநேனி சின்னி, செயலாளர் சனா சதீஷ், விளையாட்டு துறை தலைவர் அனிமினி ரவிநாயுடு ஆகியோர் முதல்வர் முகாம் அலுவலகத்துக்குச் சென்றனர்.