×

“கொரோனா மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது; அபராதம் விதிக்க யோசிக்காதீர்கள்” – மத்திய அரசு ஷாக் தகவல்!

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிக்கொண்டிருக்க இந்தியாவிலோ இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிவருகிறது என மத்திய சுகாதாரத் துறை ஷாக் தகவல்களைக் கூறியுள்ளது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் குறைந்தது 18 மாநிலங்களில் பரவியிருக்கலாம் என்பதை அணுமானமாகக் கூறுகிறது. இதனால் மீண்டும் கொரோனா நடைமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், “இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மோசமான
 

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிக்கொண்டிருக்க இந்தியாவிலோ இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிவருகிறது என மத்திய சுகாதாரத் துறை ஷாக் தகவல்களைக் கூறியுள்ளது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் குறைந்தது 18 மாநிலங்களில் பரவியிருக்கலாம் என்பதை அணுமானமாகக் கூறுகிறது. இதனால் மீண்டும் கொரோனா நடைமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், “இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. இந்தியாவில் பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ் 807 பேருக்கும், தென்னாப்பிரிக்க உருமாறிய வைரஸ் 47 பேருக்கும் பரவியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. நாட்டில் பதிவுசெய்யப்படும் பாதிப்புகளில் 78.5% பாதிப்புகள் மேற்கண்ட மாநிலங்களில் பதிவாகின்றன” என்றார்.

அதேபோல தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவர் விகே பால் பேசும்போது, “நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாகச் செயல்பட்டாலும் வைரஸ்களின் வீரியம் அடங்கவில்லை. அவற்றின் தீவிரத்தன்மையால் நமது பாதுகாப்பு வளையத்தைத் தகர்க்க முற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை துளிர் விடும் சமயம் அவற்றின் வீரியம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. தற்போது அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தான் காரணம் என கருதவில்லை. பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியே ஆக வேண்டும். மக்கள் நடைமுறையைப் பின்பற்ற சட்டத்தைப் பயன்படுத்துங்கள். அபராதம் விதிக்க யோசிக்காதீர்கள். மாஸ்க் அணிவதன் முக்கியவத்துவத்தை எடுத்துரைங்கள்” என்றார்.