×

18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் அதிக பாதிப்புகள், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்பை விட ஆக்சிஜன் சிலிண்டர்களும் தடுப்பூசிகளும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இதனால் நாடே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. இச்சூழலில் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும்
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் அதிக பாதிப்புகள், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்பை விட ஆக்சிஜன் சிலிண்டர்களும் தடுப்பூசிகளும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இதனால் நாடே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

இச்சூழலில் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வந்தால் தடுப்பூசி பதுக்கல் நடைபெறும் என்றும், நலிந்த மக்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதற்கு நடுவே மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மே மாதத்திலிருந்து அதிக தடுப்பூசிகள் தேவைப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசு சார்பில் தடுப்பூசி வாங்கி செலுத்த வேண்டும் அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இச்சூழலில் அசாம் மாநிலத்திலுள்ள 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு அசாம் ஆரோக்கிய நிதி என்று பெயரில் மக்களிடம் இருந்து கொரோனா நன்கொடை பெறப்பட்டது. அந்த நன்கொடையைப் பயன்படுத்தி மக்களுக்காக கொரோனா தடுப்பூசி வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.