×

செப்டம்பர் மத்தியில் தான் கொரோனா பாதிப்பு குறையும்!

இந்தியாவில் செப்டம்பர் மாத மத்தியில் கொரோனா பாதிப்புகள் குறையும் என மத்திய சுகாதார துறை அமைச்சக அதிகாரிகளின் ஆய்வு தெரிவிக்கிறது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தை சேர்ந்த அனில் குமார், ரூபாலி ராய் ஆகியோர் BAILEY MODEL அடிப்படையில் நாட்டில் மார்ச் 1 முதல் மே 19 வரையிலான கொரோனா தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Epidemiology International என்ற ஆன்லைன் இதழில் வெளிவந்துள்ளன. அதில் நாட்டில் மார்ச் 2 முதல் கொரோனா பாதிப்பு
 

இந்தியாவில் செப்டம்பர் மாத மத்தியில் கொரோனா பாதிப்புகள் குறையும் என மத்திய சுகாதார துறை அமைச்சக அதிகாரிகளின் ஆய்வு தெரிவிக்கிறது.

மத்திய சுகாதார துறை அமைச்சகத்தை சேர்ந்த அனில் குமார், ரூபாலி ராய் ஆகியோர் BAILEY MODEL அடிப்படையில் நாட்டில் மார்ச் 1 முதல் மே 19 வரையிலான கொரோனா தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Epidemiology International என்ற ஆன்லைன் இதழில் வெளிவந்துள்ளன. அதில் நாட்டில் மார்ச் 2 முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத மத்தியில் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மத்தியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் சமமாக மாறிய பிறகு கொரோனா தொற்று குறையும் என ஆய்வில் கூறியுள்ளனர். அதாவது வைரஸ் பரவல் குறைந்துவிட்டது அல்லது நின்றுவிட்டது என்ற நிலையை எட்டும் என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.