×

"2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்க‌க்கூடாது"- மத்திய அரசு

 

மத்திய பிரதேசத்தில் இருமல்  சிரப் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் இறந்த‌தாக கூறப்படும் நிலையில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல்  சிரப் வழங்க‌க்கூடாது என் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு இருமல்  சிரப் பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி  சிரப் பரிந்துரைக்கப்படுவதில்லை, மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ம.பி, ராஜஸ்தானில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும்.