×

கொரோனா மோகம் குறைந்தது…. கூகுளில் மீண்டும் படம், சீதோஷ்ணநிலை குறித்து தேட தொடங்கி மக்கள்

தேடுதல் தளமான கூகுள் தனது தளத்தில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் எந்தெந்த விஷயங்கள் குறித்து மக்கள் அதிகம் தேடினார்கன என்பது குறித்த தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மே மாதத்தில் கூகுளில் இந்திய மக்கள் அதிகம் எந்தெந்த விஷயங்களை தேடினார்கள் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் அறிக்கையின்படி, நம் நாட்டில் கடந்த மே மாதத்தில் நெட்டின்சன்கள் திரைப்படங்கள், அர்த்தம், செய்திகள் மற்றும் காலநிலை ஆகிய விஷயங்கள் குறித்து அதிகம்
 

தேடுதல் தளமான கூகுள் தனது தளத்தில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் எந்தெந்த விஷயங்கள் குறித்து மக்கள் அதிகம் தேடினார்கன என்பது குறித்த தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மே மாதத்தில் கூகுளில் இந்திய மக்கள் அதிகம் எந்தெந்த விஷயங்களை தேடினார்கள் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் அறிக்கையின்படி, நம் நாட்டில் கடந்த மே மாதத்தில் நெட்டின்சன்கள் திரைப்படங்கள், அர்த்தம், செய்திகள் மற்றும் காலநிலை ஆகிய விஷயங்கள் குறித்து அதிகம் தேடியுள்ளனர். பல வாரங்களாக கொரோனா வைரஸ் குறித்த அதிகம் தேடிய நெட்டின்சன்கள் கடந்த மாதத்தில் கொரோனா வைரஸ் குறித்து தேடுவதை குறைத்து விட்டனர். மே மாதத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் 12வது இடத்துக்கு கொரோனா வைரஸ் பின்தங்கியது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையிலும், முந்தைய ஏப்ரல் மாதத்தில் கொரோனா குறித்த தகவல்களை தேடியதை காட்டிலும் மே மாதத்தில் 50 சதவீதம் குறைந்தது.

அதேசமயம், கிரிக்கெட்டை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக கொரோனா வைரஸ் குறித்து கூகுளில் நெட்டிசன்கள் தேடியுள்ளனர். கடந்த மாதம் lockdown 4.0, eid mubarak ஆகியவை குறித்து மக்கள் கூகுளில் தேடினர். ஆக, கோவிட்-19 முந்தைய காலங்களில் காணப்பட்ட நுகர்வு முறைகளுக்கு மக்கள் திரும்ப முயற்சிக்கிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.