ஒன்றரை லட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு!
இதுவரை உலகம் முழுவதும் 56லட்சத்து 78 ஆயிரத்து 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 51 ஆயிரத்து 667 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 24லட்சத்து 28 ஆயிரத்து 132 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும்
May 27, 2020, 09:41 IST
இதுவரை உலகம் முழுவதும் 56லட்சத்து 78 ஆயிரத்து 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 51 ஆயிரத்து 667 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 24லட்சத்து 28 ஆயிரத்து 132 பேர் குணமாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,45,380 லிருந்து 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64,426 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.