×

1 லட்சத்து 38 ஆயிரத்து 845 ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 54 லட்சத்து 97 ஆயிரத்து 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 46 ஆயிரத்து 668 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 23 லட்சத்து 1 ஆயிரத்து 898 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

இதுவரை உலகம் முழுவதும் 54 லட்சத்து 97 ஆயிரத்து 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 46 ஆயிரத்து 668 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 23 லட்சத்து 1 ஆயிரத்து 898 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,31,868லிருந்து 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது.