×

கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களை குவியல் குவியலாக குழிக்குள் வீசும் ஊழியர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை கர்நாடக சுகாதாரத்துறை ஊழியர்கள் குழிக்குள் தூக்கி வீசி சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானமற்ற முறையில் வீசும் அவலம் திருச்சி மற்றும் புதுச்சேரியில் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் இதேபோன்று அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Watch | Bodies of #coronavirus patients allegedly dumped in a large pit in Karnataka’s Bellari; investigation underway.
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை கர்நாடக சுகாதாரத்துறை ஊழியர்கள் குழிக்குள் தூக்கி வீசி சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானமற்ற முறையில் வீசும் அவலம் திருச்சி மற்றும் புதுச்சேரியில் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் இதேபோன்று அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெல்லாரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு, அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இறந்தோரின் உடல்களை துப்புரவு பணியாளர்கள், அவமதிக்கும் விதத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். உடலை தரத்தரவென இழுத்து குழிகளில் தூக்கிப்போட்டு புதைக்கின்றனர். இந்நிலையில்தான் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 14,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 226 பேர் உயிரிழந்துள்ளனர்.