×

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு உயர்வு!

இதுவரை உலகம் முழுவதும் 68 லட்சத்து 44 ஆயிரத்து 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 98 ஆயிரத்து 141 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 33 லட்சத்து 35 ஆயிரத்து 399 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

இதுவரை உலகம் முழுவதும் 68 லட்சத்து 44 ஆயிரத்து 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 98 ஆயிரத்து 141 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 33 லட்சத்து 35 ஆயிரத்து 399 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,26,770லிருந்து 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,14,073 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.