×

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது… குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.04 லட்சமாக உயர்வு

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. கெரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தற்போது கவலை அளிப்பதாக உள்ளது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒட்டுமொத்த அளவில் 65.55
 

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. கெரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தற்போது கவலை அளிப்பதாக உள்ளது.

வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒட்டுமொத்த அளவில் 65.55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 3.86 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் 31.44 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அந்த அமைப்பின் அறிக்கையின்படி, நம் நாட்டில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 9,633 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,04,071ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,088ஆக அதிகரித்தது.