×

மகாராஷ்டிர மாநிலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக நிர்ணயம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை நாட்டில் 3,08,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 1,45,779 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8,884
 

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை நாட்டில் 3,08,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 1,45,779 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8,884 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாட்டில் 1,54,330 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றை கண்டறிய நடத்தப்படும் ஆர்.டி-பி.சி.ஆர் (RT-PCR) பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கட்டணம் ரூ.4,400-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு சென்று மக்களிடம் கொரோனாவுக்காக மாதிரிகள் சேகரித்தால் ரூ.2,800 வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.