×

’24 மணிநேரத்தில் 35,000 பேர் குணமடைந்தனர்’ இந்திய அளவில் கொரோனா நிலவரம்

கொரொனா எனும் ஒற்றைச் சொல் உலக வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இதன் பாதிப்பு பரவியது. அதனால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கொரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆயினும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதும் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகப்பதுமே ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும். அரசுகளின் தொடர் நடவடிக்கைகளாலும்,
 

கொரொனா எனும் ஒற்றைச் சொல் உலக வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இதன் பாதிப்பு பரவியது. அதனால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கொரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆயினும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதும் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகப்பதுமே ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும்.

அரசுகளின் தொடர் நடவடிக்கைகளாலும், கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. இந்தத் தொற்றினால் உயிரிழக்கும் விகிதம், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இ்ந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது.

கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதம் முதல், குறைந்த அளவிலேயே உள்ளது. இது தற்போது 2.23 சதவீதமாக உள்ளது

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,286 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களில் எண்ணிக்கை மொத்தம் 9,88,029 ஆகும். குணமடையும் விகிதமானது 64.51 விழுக்காட்டை எட்டியுள்ளது.

தொடர்ந்து ஆறாவது நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கூடுதலாக உள்ளது.

இதுபோன்ற ஆறுதல் செய்திகளே கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கும் அவர்களி குடும்பத்தினருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியவை யாகும்.