×

“இரண்டே நாட்களில்” சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!

சித்தூரில் 2 நாட்களில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலால் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அளித்த மத்திய அரசு பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது. அதன் படி, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவ.2ம் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்தது. நேற்று முன்தினம் பள்ளிகள்
 

சித்தூரில் 2 நாட்களில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலால் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அளித்த மத்திய அரசு பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது. அதன் படி, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவ.2ம் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்தது.

நேற்று முன்தினம் பள்ளிகள் தொடங்கிய அன்றே சித்தூர் மாவட்டத்தில் 57 ஆசிரியர்கள் மற்றும் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியது. கொரோனா அச்சத்தால் குறைந்த அளவிலேயே மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில், பள்ளிகளை திறந்து இரண்டே நாட்களில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.