×

அதிவேகமாக பரவும் கொரோனா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியிடப்பட்ட தகவல் பீதியை அதிகரிக்கச் செய்தது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை மூடுவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, ஊரடங்கை
 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியிடப்பட்ட தகவல் பீதியை அதிகரிக்கச் செய்தது.

பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை மூடுவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, ஊரடங்கை அமல்படுத்துவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இருப்பினும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று 11.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.