×

கொரோனா தடுப்பூசியில் 1 லட்சத்தைக் கடந்த மாநிலம் இதுதான்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளில் பல நாடுகள் களம் இறங்கி விட்டன. இந்தியாவிலும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 33,670 பேர் உட்பட, நாட்டில் மொத்தம் 8,06,484 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,398 அமர்வுகளில் 1,31,649 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 14,118 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி
 

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளில் பல நாடுகள் களம் இறங்கி விட்டன. இந்தியாவிலும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 33,670 பேர் உட்பட, நாட்டில் மொத்தம் 8,06,484 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,398 அமர்வுகளில் 1,31,649 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 14,118 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 1,21,466 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,92,308 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தற்போதைய மொத்த பாதிப்பில் 4,893 குறைந்துள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களில் 73 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் 19,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 1,02,65,706 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் வீதம் 96.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 7,364 பேர் ஒரே நாளில் புதிதாகக் குணமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,589 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 6,815 பேரும், மகாராஷ்டிராவில் 3,015 பேரும், சட்டீஸ்கரில் 594 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட 151 உயிரிழப்புகளில் 83.44 சதவீதம், 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.