×

மீண்டும் தலைதூக்கும் கொரோனா : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.58 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,58,727 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்
 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,58,727 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,06,66,486லிருந்து 3,07,09,879 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 43,733, நேற்று 45,892 ஆக இருந்த பாதிப்பு இன்று 43,393 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 911 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,05,939 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் ஒரேநாளில் 44,459 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,98,43,825லிருந்து 2,98,88,284 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,58,727 ஆக அதிகரித்துள்ளது.