×

‘கொரோனாவின் கோரத்தாண்டவம்’ மருத்துவமனையில் இடமில்லை : காரிலேயே நோயாளி மரணம்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு இருப்பதால் மருத்துவமனையில் இடமில்லாமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமலும் கையில் சடலங்களை வைத்துக் கொண்டு
 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு இருப்பதால் மருத்துவமனையில் இடமில்லாமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமலும் கையில் சடலங்களை வைத்துக் கொண்டு உறவினர்கள் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்த நிலையில், பனஸ்காந்தா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இடமில்லாததால் கொரனோ நோயாளி ஒருவர் காரிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்க காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவமனைகளில் இடமில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அவர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சமயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோயாளி காரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதே மருத்துவமனையில் மற்றொரு கொரோனா நோயாளி ஒருவர் பல மணி நேரத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு வெண்டிலேட்டர் வசதி, படுக்கை வசதி என ஏதும் செய்து தரப்படவில்லையாம். இந்த அவல நிலை குஜராத்தில் மட்டுமல்ல. பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் இது போன்ற இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.