×

கொரோனா ரேஸில் முதலிடம்….பிரேசில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் முதல் வேகமாக பரவ தொடங்கிவிட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்
 

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் முதல் வேகமாக பரவ தொடங்கிவிட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 513 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்புகள் 1,64,623 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 66 ஆயிரம் பேரும், பிரேசிலில் சுமார் 41 ஆயிரம் பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,931- பேர் உயிரிழந்த நிலையில் அமெரிக்காவில் 897 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.