×

80 சதவிகிதத்தை நெருங்கும் குணமடைபவர்களின் விகிதம் இந்தியாவில் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்குத்தான். அந்தளவுக்கு புதிய நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 6 லட்சத்து 97 ஆயிரத்து 734 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 889 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 56 ஆயிரத்து 444 பேர்.
 

கொரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்குத்தான். அந்தளவுக்கு புதிய நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 6 லட்சத்து  97 ஆயிரத்து 734 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 889 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 56 ஆயிரத்து 444 பேர்.   தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,01,399 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 69,25,941 பேரும், இந்தியாவில் 53,08,014 பேரும், பிரேசில் நாட்டில்  44,97,434 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆயினும், இந்தியாவில் குணம் அடைபவர்களின் சதவிகிதம் 80-யை நெருங்கி வருகிறது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

உலகளாவிய கொவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்தி முதலிடத்தில் உள்ளது. மொத்த குணமடைதல்கள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

மத்திய அரசு தலைமையிலான கவனம் மிகுந்த, திட்டமிட்ட மற்றும் திறன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை நடத்தப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சரியான கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த எண்ணிக்கையை எட்ட முடிந்திருக்கிறது. 

இந்தியாவின் மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ள நிலையில், உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும்.

தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்கள் 90 சதவீதம் பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்.