×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.. 

 


இந்தியாவில்  ஒரு நாள் கொரோனா பாதிப்பு  11,109 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.   இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது  சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  இந்தியாவில் நேற்று  கொரோனா பாதிப்பு  10,158 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்திருக்கிறது.  அதன்படி  கடந்த 24 மணி நேரத்தில் 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது  49,622 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.  இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,97,269 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் டெல்லி, ராஜஸ்தானில் தலா 3 பேரும், சத்தீஸ்கர், பஞ்சாப்பில் தலா 2 பேரும் உள்பட நேற்று மட்டும்  20 பேர் கொரோனாவுக்கு  பலியாகியுள்ளனர். இதில்  கேரளாவில் விடுபட்ட 9 இறப்புகளை கணக்கில் சேர்த்துள்ளனர். இதன்முல்லம்  கொரொனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது.