×

ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் 3 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு

ரிஷிகேஷ்: ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிஜ்ரானி, தேலா மற்றும் ஜிர்னா உள்ளிட்ட எல்லைகளை கொண்ட ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகதில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இங்கு வழக்கமாக தினமும் 60
 

ரிஷிகேஷ்: ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிஜ்ரானி, தேலா மற்றும் ஜிர்னா உள்ளிட்ட எல்லைகளை கொண்ட ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகதில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இங்கு வழக்கமாக தினமும் 60 வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் சஃபாரி பயணம் மேற்கொள்ளப்படும். ஒரு வாகனத்தில் அதிகபட்சமாக 6 பேர் வரை சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஒரு வாகனத்தில் 4 பேர் மட்டுமே சஃபாரிகளுக்காக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.