×

போராடியது ஒரு குற்றமா? நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரை பறித்துள்ளது - ராகுல்காந்தி

 

மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரை பறித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரை பறித்துள்ளது. நீட் தேர்வால் 7 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு. நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் தோல்வியடைந்து விட்டார் . நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என இளைஞர்கள் முடிவெடுத்துவிட்டனர். அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு நான் அஞ்ச போவதில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டதை தவிர மாணவர்கள் செய்த தவறு என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.