"பெல்லட் குண்டு வீசி போலீஸ் தாக்குதல்- மாணவரின் பார்வை பறிபோனது"- ராகுல்காந்தி
தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கல்வி முறையின் சீர்குலைவுக்கு பிரதான் தான் காரணம். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் இன்று வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு காரணம் அவர் தான். போலீசாரின் தாக்குதலில் இளைஞரின் கண் பார்வை பறிபோகியுள்ளது, பலர் காயமடைந்துள்ளனர். இளைஞர்களின் எதிர்காலம் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது. பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள் கோரிக்கை. மாணவர்களை தாக்கியவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்களை அடிப்பதையும், மிரட்டுவதையும் நிறுத்தி அவர்கள் மீதான தடியடிக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எந்த சமரசமும் இல்லை.. மாணவர்களின் 3 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். போராடும் மானவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக்கூடாது. மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.