×

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல்

 

பாஜக அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக வந்த தகவலை அடுத்து மண்டியா மாவட்ட காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி அமைக்க ஆப்ரேஷன் கமலா மூலமாக கட்சி தாவி அமைச்சர் பதவி பெற்றவர் நாராயண கவுடா. இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியில் அமைச்சர் பதவி பெற்ற நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் நாராயண கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைய மண்டியா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இன்று கட்சி சார்பில் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் மண்டியா மாவட்ட செயலாளர் கங்காதர் கே ஆர் பேட் தொகுதிக்கு சென்ற போது அங்கு கூடிய காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நாராயண கவுடாக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட செயலாளர் வந்த கார் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்பு அனைவரும் சமாதானம் பேசி கலைந்து சென்றனர். 

மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைக்க காரணமாக இருந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் கலைத்து வரக்கூடாது என்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உறுதியான கோரிக்கையாக உள்ளது.